இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை; அச்சம் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்..!

சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதை அவதானிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.



ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் சபைக்கு அளித்த கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சவாலான சூழலில், அரசாங்கம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.



அத்தோடு, இலங்கையின் சிவில் சமூகம், நாட்டின் ஒரு பகுதியாக இருந்தால், மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் நிலையானதாகவும் வலுவானதாகவும் அமையும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.



செப்டம்பர் 24ஆம் முதல் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை, இலங்கையில் கண்காணிப்பு பணியை நடத்திய பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் மேலும் இந்த விடயங்களை தெரிவித்துள்ளது.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *