Home Blog

எச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..!

இலங்கையில் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரத்தில் எவ்வாறு இருக் கவேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே இருக்கின்ற விதிமுறையொன்று மிகவும் கடுமையாக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அலுவலக நேரத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவரும் அரச ஊழியர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் திணைக்களத் தலைவர்களுக்கு விடுத்துள்ளார்.


கடமை நேரத்தில் சில அரச ஊழியர்கள் பேஸ்புக் பார்ப்பதால் பொது மக்களுக்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டிய பணிகள் கிடப்பில் போடப்படுவதாக அரசாங்கத்துக்கு பல முனைகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.


இதனால் பல பொதுமக்களும் தமக்குரிய சேவைகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டே இந்த நடைமுறை இறுக்கமாக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


யாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..!

யாழில் அரச அலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி அலுவலராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது 6 மாத கர்ப்பிணியாகவுள்ள தனது தங்கையையும் கர்ப்பமாக்கிய கணவனையும் என்ன செய்வது எனத் தெரியாது ஆசிரியையாகவுள்ள மனைவி குழம்பிய நிலையில் உள்ளார். காரணம் கணவன் சொன்ன சீரடிசாய்பாவா கதைதான்.


யாழ் நல்லுார் பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும் குறித்த கணவனும் மனைவியும் யாழ் நாவலர் வீதியில் உள்ள சீரடிபாவாவின் தீவிர பக்தர்கள் ஆவார். இவர்கள் திருமணம் முடித்து 3 வருடங்கள் ஆன நிலையிலும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தென்மராட்சிப் பகுதியில் உள்ள மனைவியின் சீதன வீட்டில் மனைவியின் தங்கை மற்றும் பெற்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். சனி, ஞாயிறுகளில் இவர்கள் அங்கு சென்று தங்கி வருவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள்.


இந் நிலையில் 24 வயதான மனைவியின் தங்கை தலைசுற்று மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அவர் கர்ப்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது. கர்ப்பத்துக்கு அத்தானே காரணம் என மனைவியின் தங்கை கூறியுள்ளார். இது தொடர்பாக மனைவி தனது கணவனை விசாரித்த போது அவர் பின்வருமாறு கூறியுள்ளாராம்.


“தான் நித்திரையில் இருக்கும் போது சீரடிபாபா கனவில் வந்து உனது வம்சம் உனது மனைவியின் வயிற்றில் உருவாகாது. மனைவயின் தங்கையின் வயிற்றிலேயே உருவாகும். இதனை மனைவிக்கு கூறி சமாதானப்படுத்தி அந்தக் குழந்தையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். மனைவியின் தங்கையின் கருப்பையை நீ வாடகைக்கு எடுத்துக் கொள்… இது தப்பில்லை. அப்புறம் அவளுக்கு வேறு கலியாணம் கட்டி வை” என சீரடிபாவா கூறியதாக மனைவிக்கு கதை விட்டுள்ளார்.


சீரடி பாபாவில் அதீத நம்பிக்கை கொண்ட அந்த அப்பாவி ஆசிரியையும் அதை அரைகுறையாக நம்பி தங்கையின் வயிற்றில் வரும் குழந்தையை வளர்ப்பதற்கு ஆயத்தப்படுத்துகின்றாராம்.

குழந்தை பெற்றெடுத்த பின்னர் அந்த தங்கையை சீரடிபாவாவின் அனுக்கிரகத்துடன் வெளிநாட்டு மாப்பிளைக்கு கட்டி வைத்துவிடுவார் அந்த கில்லாடி அரச அலுவலர்.

பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி..!

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும்.

தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலை சிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.


இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக் காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப் பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.


இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத் தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.


மக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சகல எதிர்பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதானத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்

(பிரதமர் ஊடக பிரிவு)

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி..!

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.


விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டு வருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.


மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப் பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோட்டாபய ராஜபக்ஷ
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இயற்கையோடு நெருக்கமாக தைப் பொங்கலைக் கொண்டாடுவோம் – எதிர்க் கட்சித் தலைவர்..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் திரு விழாவான தைபொங்கல் விழாவிற்கு வாழ்த்துக்கள்.

“அறுவடை விழா” என்று அர்த்தப்படும் தைப்பொங்கல் உற்சவம். இது மனிதகுலம், விலங்குகள் மற்றும் இயற்கையிடம் கருணை காட்டும் உன்னத நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தைப் பொங்கல் திருவிழா பொது நட்பின் உச்சமாகவும், பரஸ்பர புரிந்துணர்வின் வெளிப்பாடாகவும் காணப்படுகிறது.


2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த திருவிழா, அவர்களின் கலாச்சார அடையாளத்தை மதிக்கிறதுடன் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாக அமைகிறது.

மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் உணர்வை புதுப்பிப்பதோடு மற்றும் எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களை எதிர்பார்பதாக அமைந்து காணப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் இயற்கையை எதிர்த்துப் போவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை அனுபவித்து வருகிறது. மனிதரே பல உலக பேரழிவுகளுக்கு கதவைத் திறந்துள்ளார்.


இயற்கையோடு மேலும் மேலும் நெருக்கம் தேவைப்படுவதை தீவிரமாக உணரும் ஒரு நேரத்தில், இயற்கையுடன் தொடர்புடைய தைப் பொங்கல் போன்ற கலாச்சார விழாக்கள் அவசியமாக அதிக அர்த்தத்தை சேர்க்கின்றன.

உலகத்திற்கு தேவைப்படுவது நல்லிணக்கம். இதற்கான மனித குலத்தின் பொறுப்பு மகத்தானது.அதற்கு தைப் பொங்கல் திருவிழாவும் ஒரு பாலமாக அமைக்கப்பட்டால், உலகம் இன்னும் அழகாக இருக்கும்.

சஜித் பிரேமதாச
எதிர்க் கட்சித் தலைவர் மற்றும்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்


සොබාදහමට සමීපව තෛපොංගල් සමරමු.!

ලෝකවාසී සමස්ත හින්දු ජනතාව මහත් භක්තියෙන් සමරන තෛපොංගල් මංගල්‍යය නිමිත්තෙන් සුබ පැතුම් එක් කරන්නේ ඉමහත් ප්‍රීතියෙනි.

අස්වැන්න නෙලීමේ උත්සවය”යන අරුත ඇති තෛපොංගල් උත්සවය මනුෂ්‍ය වර්ගයාටත්, සතා සිවුපාවාටත්, m සොබාදහමටත් මෛත්‍රීය, කරුණාව දැක්වීමේ උදාර පරමාර්ථයන්ට අනුව සැකසී තිබේ.

එමතු නොව, මහජනයා අතර සුහදත්වය මෙන්ම, අන්‍යෝන්‍ය අවබෝධය උදා කර ගත හැකි උග්තුංග අවස්ථාවක් ලෙසද තෛපොංගල් උත්සවය හදුනාගත හැක.

වසර 2000කට වඩා පැරණි මෙම උත්සවය ඔවුන්ගේ සංස්කෘතික අනන්‍යතාවය මනාව ඔප්නංවන අතර මනුෂ්‍යයා හා සොබා දහම අතර ඇති අවියෝජනීය සබැඳියාව ද, මිනිසුන් අතර ඇති එකමුතුව සහ ප්‍රජා හැඟීම නැවත ප්‍රාණවත් කොට අනාගත සාර්ථකත්වය සඳහා ආශිර්වාද ලැබීමේ බලාපොරොත්තුව සංකේතවත් කිරීම ද සනිටුහන් කරයි.


වර්තමානයේ සොබාදහමට එරෙහිව යාමේ අනිටු පලවිපාක සමස්ත ලෝකයම භුක්තිවිදීමින් සිටී.ලෝක ව්‍යසන රැසකට දොරගුලු විවරකොට ඇත්තේ මිනිසා විසින්මය.

සොබාදහමට වඩ වඩාත් සමීප වීමේ අවශ්‍යතාව දැඩිව දැනෙමින් තිබෙන වකවානුවක ,සොබාදහම හා බැදුනු තෛපොංගල් වැනි සංස්කෘතික උත්සව අවශ්‍යයෙන්ම වඩා අර්ථයක් එක් කරයි.

ලෝකයට අවශ්‍ය වන්නේ සංහිඳියාව ය.ඒ උදෙසා මානව සංහතියට පැවරී ඇති වගකීම අති මහත් ය.තෛපොංගල් උත්සවය ද ඒ උදෙසා පාලමක් බවට පත් කරගන්නේනම් ලෝකය වඩාත් සුන්දර වනු ඇත.

සජිත් ප්‍රේමදාස
විපක්ෂ නායක සහ සමගි ජනබලවේගයේ නායක

வவுனியா நகரத்திற்குள் முன்னெடுக்கப்பட்டுள்ள முடக்க நிலை தொடர்பான விளக்கம்..!

வவுனியாவில் 12.01.2020 தொடக்கம் புதிதாக முடக்கப்பட்ட பகுதி அரச ஊழியர்கள் அதிபர், ஆசிரியர்கள் செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு பகுதிக்கு கடமைக்கு செல்ல வேண்டும். கடமைக்கு சமூகமளிக்க தவறுபவர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கருதப்படும். அதேவேளை பாதுகாப்பு தரப்பினர் அரச ஊழியர்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த மாட்டார்கள். அரச ஊழியரர்களின் அடையாள அட்டை வழி அனுமதிப் பத்திரமாக காணப்படும்.


அத்துடன் எதிர்வரும் வெள்ளி (15.01.2021) முதல் கட்டுப்பாடுகளுடன் குறுந் தூர பேரூந்து சேவை இடம் பெறும் என வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.


நகருக்குள் வருகை தரும் எல்லைகளான நெளுக்குளம் சந்தி, இரட்டை பெரியகுளம், மாமடுசந்தி, தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரால் வீதித்தடை அமைக்கப்பட்டு, உள்ளே அத்தியாவசியமின்றி வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், நகருக்குள் அமைந்துள்ள சகல வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.


இதன் மூலம் நகரிற்குள் ஒன்று கூடும் மக்கள் செறிவு குறைக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயது சிறுமியை வன்புணர்வு செய்த 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு நேர்ந்த கதி..!

ஐந்து வயது சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற முறையில் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது மனைவியை விட்டுப் பிரிந்தவரென்பதோடு வன்புணர்விற்கு உட்படுத்திய சிறுமியின் தந்தைக்குச் சொந்தமான தோட்டமொன்றில் நீண்டகாலமாக பணிபுரிந்து வருபவரென்பதும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி இறக்வானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமற்ற வேளையில் குறித்த சிறுமியை ஏமாற்றி அருகிலுள்ள புதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்வானை காவல் துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறு சட்டவாட்சி கோட்பாடு; நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை தவறு – காவிந்த எம்பி

1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் இனவாத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையினால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதென எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

யாழ். பல்கழைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கைலேயே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும்.

சர்வதேச நாடுகளிலும் உரிமை போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் எழுந்து, பிற்பட்ட காலத்தில் அவை போராட்ட இயக்கங்களாக மாற்றமடைந்தன.


விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியையே கொண்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு 1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நல்லிணக்கம் அனைத்து இன மக்கள் மத்தியிலும் செயற்படுத்தப்பட்டது.

2014 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இனவாதத்தை ஆயுதமாக கொண்டு செயற்படவில்லை. அனைத்து இன மக்களின் ஆதரவுடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.


நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்பட்டாலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டிருந்தது. அக் காலப் பகுதியில் ஏற்பட்ட இனக் கலவரங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் நோக்கங்கள் காணப்பட்டன.

இனகலவரத்தை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படுத்தி பயனடைந்து கொண்டார்கள். தனிச் சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று குறிப்பிடுவது தவறாகும்.

தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.

ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் காலத்தில் ஒரு இனம் மாத்திரம் தான் வாக்களித்தது என்று குறிப்பிடப்படும் போது இனங்களுக்கிடையில் முரண்பாடு மீண்டும் தோற்றம் பெறும் தற்போது இந்த நிலைமையே காணப்படுகிறது.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது.

இனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவு கூர்வது ஒன்றும் தேசத் துரோக செயற்பாடல்ல. தெற்கில் உள்ள பல்கலைகழங்களில் ஜே.வி.பி. யின் உருவச் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுப்பட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். தமிழ் – முஸ்லிம் மக்கள் தற்போது பல விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்கட்சி என்ற அடிப்படையில் நாம் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கைது..!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கொழும்பு விஜேராம பகுதியில் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் சில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு விஜேராம பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.


இதன்போது, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முயற்சித்தபோது, அனுமதியின்றி அதற்கு இடமளிக்க முடியாது என பொலிஸார் அந்தத் தருணத்தில் உத்தரவிட்டனர்.

அதன் பின்னர் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான்கு மாணவர் பிரநிதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பமளிப்பதற்கு இதன் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

அம்மாவிற்கு அழகான மருமகன் தேவை எனக்கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட இளவயது யுவதிகள் 9 பேர் கைது..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட யுவதிகள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிலியந்தலை, மொரட்டுவ வீதியில் விடுதியொன்றில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் சூட்சுமமான விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். எனது அம்மாவிற்கு அழகான மருமகன் தேவை, தனிமையிலுள்ள என்னை அழையுங்கள், காதலிக்க ஒரு துணை தேவை என சமூக ஊடகங்களில் விளம்பங்கள் வெளியிட்டு ஆண்களை கொக்கி போட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


வாடிக்கையாளர் போல சென்ற பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

25, 28, 32 வயதான பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மேலும் 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


மாத்தறை, வெலிமடை, பண்டாரகம பகுதிகளை சேர்ந்த யுவதிகளே கைதாகினர். கொழும்பில் வேலை செய்வதாக வீடுகளில் கூறிவிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

விளம்பரங்கள்
அண்மைய செய்திகள்

அதிகமாக வாசிக்கபட்டவை