சற்று முன்னர்: பற்றியெரியும் பசில் ராஜபக்சவின் வீடு; வேடிக்கை பார்க்கும் படையினர்..!

0

சற்று முன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான கொழும்பு மல்வானை பகுதியிலுள்ள வீடு பொது மக்களால் தீயிடப்பட்டது.

நேற்றைய தினம் காலிமுக திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுமக்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.


அந்தவகையில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட்து. இதனையடுத்து தப்பியோடிய மஹிந்த குடும்பம் திருகோண்மலை கடற்படை முகாமில் பதுங்கியுள்ளனர்.


இந்த நிலையிலேயே இன்று பசில் ராஜபக்ஷவின் மல்வனை வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பற்றி எரியும் பசிலின் வீட்டை மக்களுடன் சேர்ந்து படையினரும் வேடிக்கை பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.