பிரதமர் மகிந்த ராஜினாமா; விசேட வர்த்தமானி அறிவிப்பு..!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 47(2)(ஆ) ஆம் உறுப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் பிரதமர் பதவியில் இருந்து 2022 மே மாதம் 09 ஆந் திகதியிலிருந்து கேட்டு தாமாக விலகியுள்ளார் என்று சனாதிபதியின் செயலாளர். காமினி செனரத்தினால் இந்த வர்த்மானி அறிவிப்பு நேற்று (09) வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிக்கு நேற்று (09) நண்பகல் அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.