ரம்புக்கனை சம்பவத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – கூட்டமைப்பு கண்டனம்

0

ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் வன்முறைச் தொடர்பான சுயாதீன விசாரணை உடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த ட்விட்டர் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ரம்புக்கனை சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.