ரிஷாட் பதியுதீனின் கட்சியின் MP முஸாரப் இராஜாங்க அமைச்சராக கடமையேற்றார்..!

0

முன்னாள் கைத்தொழில் வணிக அமைசரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரான ரிஷாட் பதியுதீனின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஸாரப் எம்பி இராஜாங்க அமைச்சராக கடமையேற்றார்


இவர் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சராக இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதேபோல் கடந்த 2014 வரை ரிஷாட் பதியுதீனின் கட்சி ஊடாக பாராளு மன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்திய உனைஷ் பாறூக் பிரதியமைச்சர் பதவிக்காக 2014 டிசம்பரில் வெளியேறி எதிராகச் செயற்பட்ட போதும் 2020 பாராளுமன்ற தேர்தலிலும் இன்றும் இணைந்து பயணிக்கின்றார்.