கோட்டா அரசுக்கெதிராக போராட்டத்தில் குதித்த நியூசிலாந்து வாழ் இலங்கையர்கள்..!

0

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறித்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.


இதேவேளை இன்றைய தினம் இலங்கையில் பல இடங்களில் இடம் பெற்றவிருந்த பாரிய போராட்டம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தற்போதய அரசுக்கெதிராக நியூசிலாந்தில் வாழும் இலங்கை மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.