அரச உயர் அதிகாரிகளின் மோசடி; புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த விசேட அறிக்கை..!

0

அமைச்சுக்களின் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் உட்பட 140க்கும் மேற்பட்ட அரச உயர் அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் அரச உயர் அதிகாரிகளின் இந்த செயற்பாடு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.


இவ்வாறு அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நிதியமைச்சு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை தமது குடும்ப உறுப்பினர்களின் பாவனைக்காகவும், ஏனைய வாகனங்களை அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களின் கடமைகளுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரச அதிகாரிகள் தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு ஏற்றிச் சென்ற பல வாகனங்கள் பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருப்பதன் படங்களை புலனாய்வு அமைப்புகள் அரசுக்கு வழங்கியுள்ளன.


வாகன துஷ்பிரயோகம் காரணமாக வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான பணம் விரயமாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.