விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய..!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளார் .


இம்மாத இறுதி வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பேச்சவார்த்தையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு, வடக்கு கிழக்கு அபிவிருத்தி, மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.