வவுனியாவில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா; ஏனையோருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை..!

0

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவுள்ளது. இதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா முடக்க நிலையை அடுத்து அண்மையில் ஆரம்பபிரிவு மாணவர்களிற்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் வவுனியா மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பில் உள்ள ஏனைய மாணவர்களிற்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அரசில் அங்கம் வகிப்பவர்களின் அதீத அரசியல் தலையீட்டுடன் அவசர அவசரமாக பாடசாலைகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.