எனது கல்வி அமைச்சின் செயலாளருடன் பணியாற்ற முடியாது; அவரை உடன் மாற்றுங்கள்..!

0

தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பதவிக்கு வேறு ஒரு பொருத்தமான நபரை நியமிக்குமாறும் தினேஸ் குணவர்தன பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், குறித்த பதவிக்காக வேறு ஒரு நபரின் பெயரையும் கல்வியமைச்சர் இதன் போது பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது குறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிப்பதோடு, தான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வியமைச்சருக்கு பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஊழல் இன்றி நெகிழ்வுப் போக்குடன் செயற்படும் உயர் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.