வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு..!

0

என்றும் இல்லாத வகையில் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னர் வெளிநாடு செல்வதற்கு தினசரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆகக் காணப்பட்டது.

எனினும் தற்போது அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.