சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இராஜினாமா; சுகாதார அமைச்சருக்கும் மாற்றம்???

0

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த மருத்துவர் பிரசன்ன குணசேனவின் பதவி விலகலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


மருத்துவர் பிரசன்ன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பதவி விலக முடிவு செய்தார்.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய அப்பதவியிலிருந்து பதவி விலகலாம் அல்லது மாற்றப்படலாம் என்ற நிலைமை கூட வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.