ஊதியம் கோரி ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் நேற்று (25) நிறுவன தலைவரின் அறையை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரையில் வழங்கப்படாமையால் அங்கு ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.


மேலும், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்தியுள்ளதாக நிறுவன முகாமைத்துவம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்காததன் பின்னணியில் தற்போது அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலும் அரசு கை வைத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியரொருவர் தெரிவித்தார்.