கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..!

0

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் பளைக்கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அதிபர்,ஆசிரியர்கள் பாடசாலை நிறைவடைந்ததும் பளை கல்விக் கோட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் பிற்பகல் 2.00மணிக்கு ஈடுபட்டனர்


கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.


நாம் 5000ரூபாவுக்கு அடி பணியமாட்டோம், ஆசிரியர் சேவையை கொச்சைப் படுத்தாதே, கல்விக்கு 6% ஐ ஒதுக்கு, இலவசக் கல்வியை சீரழிக்காதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.