எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார்; அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு..!

0

அரசாங்கம் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆணையை புதுப்பிக்க பொதுமக்கள் முன் செல்ல தயங்க மாட்டேன் எனவும் தேர்தல் தாமதங்கள் தொடர்பாக முந்தைய நிர்வாகத்துடன் போராடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வாக்காளர்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால், ஆணையைப் புதுப்பிக்க அவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


தேர்தல்களை நடத்துவதற்கு தாம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தவில்லை. ஆனால் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காகவே பணியாற்றி வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறினார்.


வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பொது மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், குறித்த நிதி அவர்களுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.