தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்; அலட்சியப்படுத்தக் கூடாது – ஆயர் இல்லம்

0

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயத்தை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.


இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். ஞானசார தேரரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுமென கூறியிருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்படையினராலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக் கூடும் என கூறியுள்ளதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.


இலங்கை கடற் படையினர் தவறுதலால் நடந்தவொன்று என உஸ்வெட்ட கேயாவ கடற்படை முகாமினர் கூறியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை இராணுவத் தளபதி மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு நீதி கோரும் குழுவின் உறுப்பினரான அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.


இலங்கை கடற்படையினரால் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக் கூடும் என கூறிய விடயம் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.