ஐந்து வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; இளம் குடும்பஸ்தர் கைது – பொலிஸ் பேச்சாளர்

0

நுகேகொடவில் 5 வயது சிறுமியை மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


பொலிஸ் செய்தி தொடர்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா கூறுகையில்,

அந்த நபர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 20 வயதான திருமணமானவர், அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் அயல் வீட்டில் வசிப்பவராவார்.


அவர் சிறுமியை கொடூரமாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக தெரிவித்தார்.


சந்தேக நபர் 72 மணிநேர காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.