சிங்களக் கட்சிகளுக்கு வால் பிடிக்கும் தமிழர் அம்மணமாகத் திரியுங்கள் – சுகாஸ் தெரிவிப்பு

0

அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும் எனவும் தெரிவித்தார்.

 
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி முட்டுக்காலில் நிற்க வைத்து சித்திரவதை செய்து மிரட்டிய ஆளுங் கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள். தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும்.

கொரோனாக் காலத்தில் யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளில் கை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் புறக்கணிப்பை கோரியது. இக் கடும் போக்கான செயற்பாடும் கோட்டாவின் வெற்றிக்கு சிறிய அளவில் சாதகமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.