இன்று சனிக்கிழமை (4) தலைநகர் பரிஸ் உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.
நாடு முழுவதும் 141,655 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 160,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாரம் ஆர்ப்பாட்டக் காரர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
தலைநகர் பரிசில் ஐந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மொத்தமாக 15,000 பேர் பரிசில் இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Forum des Halles வளாகத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்கரர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாடு முழுவதும் 1,723 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறை அதிகாரிகள் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.