கொரோனா தொற்றால் சுகாதார மருத்துவ அதிகாரி பலி..!

0

ஆனமடுவை பிரதேச மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கடவத்தையில் வசிக்கும் இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.


நீர்கொழும்பு பொது வைத்திய சாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த அவர், பின்னர் ஆனமடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.


சுமார் 10 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இவர் அங்கொட ஐ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.