ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடு திரும்பிய வைத்தியர்..!

0

யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நாளை மீண்டும் பொறுப்பேற்கிறார்.


பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டது.


அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் இன்று காலை 8 மணிக்கு தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடு திரும்பியுள்ளார் என்பதுடன் இறுதி யுத்த காலப் பகுதில் வன்னியில் கடமையாற்றிய வைத்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாது கடமைகளைப் சுகாதார அமைச்சு வழங்கியமை பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கொரோனா காரணமாக விசா வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.