நியூசிலாந்தில் மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் முயற்சி; இலங்கையர் சுட்டுக்கொலை..!

0

நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார்.


இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை வெளியிட நியூசிலாந்து மறுத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ள இந்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்டுள்ளார்.


தீவிர கண்காணிப்பு வலயத்தில் இருந்த போதே இவர் இன்று மக்கள் மீது தாக்குதலை நடத்தி 6 பேரை படுகாயமடைய செய்துள்ளார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.