வவுனியாவில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று..!

0

வவுனியா வடக்கு ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இடம் பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது

கடந்த 24 ஆம் திகதி ஒலுமடு பட்டைபிரிந்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 பேரில் 28 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குறித்த மரணச் சடங்கு இடம் பெற்ற வீட்டில் இருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டமையால் வவுனியா புளியங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்த போது குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் குறித்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 30 பேருக்குத் துரித அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 28 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் கண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அவர் களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.