வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம்; இன்றும் நால்வர் பலி; பலருக்கு தொற்று உறுதி..!

0

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவின் குடியிருப்பு, தாண்டிக்குளம், தேக்கவத்தை, கோயில்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 99, 86, 39, 76 வயதுகளையுடைய நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த நான்கு பேரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதேவேளை, வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.