கொவிட் நெருக்கடியின் மத்தியில் ஆளும் கட்சியின் எம்பிகளுக்கு புதிய பதவிகள், சொகுசு வாகனங்கள்..!

0

தற்போதைய சூழ்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு உறுப்பினர்கள் பதவி வழங்கப் பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


நெருக்கடியான இந்த நேரத்தில் அரசால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர்களுக்கான நியமனக் கடிதம் அடுத்த வாரம் நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இந்நிலையில், இவ்வாறு நியமனம் பெறும் உறுப்பினர்களுக்கு அரச வாகனம், எரிபொருள் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.