சுகாதார அமைச்சின் விதிகளை மீறி முகக் கவசம் இன்றி பந்துலவுடன் தேனீர் அருந்திய டலஸ்..!

0

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோர் தனிமைப் படுத்தபட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.


அவர் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கோவிட் ஒழிப்பு செயலணியில் கலந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சருடன் ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் முகக் கவசம் இன்றி தேனீர் அருந்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.