விமல் உட்பட அரசின் பங்காளிகளை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி..!

0

அமைச்சரவையில் இருந்து கொண்டு கூட்டுப் பொறுப்பை மறந்து நாட்டை முடக்க வேண்டும் என பிரத்யேகமாக ஊடக அறிக்கை வெளியிட்ட விமல், கம்மன்பில, வாசு கூட்டணியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய எச்சரித்துள்ளார்.


அமைச்சரவையில் இது பற்றிப் பேசுகையில்,

இங்கு கருத்து வெளியிடாது ஊடக அறிக்கை வெளியிட்டதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


இதனால் அமைச்சர்கள் மூவரும் கடும் சீற்றமடைந்தனர் எனவும், அவர்களை அலரி மாளிக்கைக்கு அழைத்து விருந்து வைத்து பிரதமர் மஹிந்த சமரசப்படுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.