பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி; பொலிஸ் அதிகாரி கைது..!

0

பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார். 13 வயது சிறுமியின் தாயாரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதேநேரம் சந்தேக நபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.