வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..!

0

வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் முடிவுகளின் அடிப்படையில் குறித்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் பொலிஸாரின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டார்.


இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோடு, அவரிடம் அண்மைக் காலமாக நெருங்கி பழகியவர்களை இனங்காணும் முயற்சியில் சுகாதாரத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.