கடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்

0

கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வரும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க அதிக பட்ச முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன முரண்பாடுகள் பி.சி. பெரேரா குழுவின் அறிக்கையின் ஊடாகவே ஏற்பட்டன. ஆனால் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எப்போதுமே ஒரு முக்கியத்துவத்தை வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம், இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும், அதற்கு சாதகமான தீர்வைப் பெறமுடியும் என நம்புவதாக அவர் கூறினார்.


இந்த நிலையிலி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாளை அனைத்து ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற் சங்கங்கள் தங்கள் அழுத்தத்தை மாணவர்களை நோக்கி திருப்ப வேண்டாம் என்றும் அவர்களின் இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.