பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..!

0

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த 22 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இவர் பிரபல வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவத்தையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் குறித்த சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.