பனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

0

பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.8 ரிச்டெர் அளவில் பதிவாகியுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சோத விபரம் தொடர்பான உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி பனாமாவின் பசுபிக் கடற்கரையிலும், கோஸ்ட்டா ரிக்காவின் பகிரப்பட்ட எல்லையிலும், பனாமாவின் புண்டா டி புரிக்காவிலிருந்து தெற்கே 30 மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது சுமார் ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்டது.


பனாமாவின் தலைநகரில் நடுக்கம் உணரப்படவில்லை. ஆனால் மேற்கு பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்காவின் சில பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டது.