புதிய 18L எரிவாயு சிலிண்டர் விலையை 1,150 ரூபாயாக குறைக்க தீர்மானம்..!

0

உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களால் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 18L எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை 1,150/= க்கு விற்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வர்த்தக அமைச்சு தயாராகி வருகிறது.


எரிவாயுவை கொள்வனவு செய்யும் நுகர்வோர் குறித்த சிலிண்டரை லிட்டரில் அளவிட முடியாது என்பதால் சிலிண்டரின் எடையை கிலோ கிராமில் குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு அறிமுகம் செய்து நுகர்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதுடன் சாதாரண உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கு சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.