15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் பணிநீக்கம்..!

0

15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான கடற்படையின் விசேட வைத்திய நிபுணரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகே தென்னவினால் குறித்த வைத்தியர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் கடற் படையினரால் உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


இந்த விவகாரம் தொடர்பில் பலர் ஏற்கனவே கைதாகியுள்ளதுடன், பண்டாரகம பகுதியில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டரான, இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.