நிவாரண மோசடியில் ஈடுபட்ட முன்னணியின் பெண் உறுப்பினரை கடுமையாகத் தாக்கிய பொதுமக்கள்..!

0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை சிதைத்து கட்சி அரசியலுக்குள் முடக்கி அரசியல் லாபம் தேடிவந்துள்ளார் என குற்றம்சாட்டி பெண் ஒருவரை யாழில் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி மீதே நேற்றைய தினம் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் நிவாரண மோசடியில் ஈடுபட்ட குறித்த பெண்மணி மீது அப்பகுதி மக்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது நாட்டிலுள்ள கொரோனா தொற்றினால் வடமராட்சி கிழக்கில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புலம்பெயர் மக்களை ஏமாற்றி தமது கட்சி முகவர்களுக்கு மட்டும் திரும்ப திரும்ப நிவாரணம் வழங்கி வந்துள்ளார் என என கூறியே அவர் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.


அப்பகுதியில் தொடர்ந்தும் மோசடியில் ஈடுபடும் இன்னும் ஒரு நபர் மீதும் தாக்குதல் நடத்த இருப்பதாக அப்பகு சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக ஐபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கொடுக்கிளாய் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிய போது மூவர் அடங்கிய குழு ஒன்று அவரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா சிங்கள காவல் துறையில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தாக்குதலில் ஜனநாயக வழியில் செயற்படும் அரசின் பங்காளி கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என்றும் குறித்த பெண்ணின் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.