ஜனாதிபதி கோட்டாபயவின் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளியுமான துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்ததை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸ், 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.


எனினும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டமையை தூதுவர் வரவேற்றார்.

இந்த கைதிகளின் விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்து தண்டித்த சில்வாவின் மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ”என்று தூதுவர் டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.