முன் பகை காரணமாக டிப்பர் சாரதி இராஜாங்க அமைச்சரின் பாதுகாவலரால் சுட்டுக் கொலை – அஜித் ரோகண

0

அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கும் உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ் வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம் பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


இதேவேளை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு சட்டத்தை கையிலெடுத்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியது யார்? அவ்வாறாயின் நாட்டில் நீதி மன்றங்கள் ஏன்? அவைகளை இழுத்து மூடுவதே பொருத்தமானது என மக்கள் வினசம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் பிரதேச செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் மின்னஞ்சல் முகவரி News.tamilpori@gmail.com