மக்களை முழந்தாளிடச் செய்த சம்பவம்; இராணுவ சிப்பாய்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்..!

0

இராணுவம் பொது மக்கள் சிலரை நேற்று முழந்தாளிட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள இராணுவம், இந்த சிப்பாய்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுமென தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.


பயணத் தடையை மீறிய நபர்களை கட்டாயப்படுத்தி, முழங்காலில் அமரவைத்து, கைகளை உயர்த்துமாறு ஏறாவூரில் உள்ள படையினர் விடுத்த உத்தரவு தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டன.


ஆரம்ப இராணுவ பொலிஸ் விசாரணை ஏற்கனவே தொடங்கப் பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

முழுமையான விசாரணைகள் முடிந்ததும், தவறு செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.