கோட்டாவின் அதிரடி; அமைச்சர் விமலிடமிருந்து லங்கா பொஸ்பேட் நிறுவனம் பறிப்பு..!

0

பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும் நிலைக்கு மாற்றிய பின்னர் அது வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ஷதுள்ளார்.


தனது முகநூல் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகேவின் கீழ் கொண்டு வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.