யாழ் சரசாலை காட்டுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; மதுவரி திணைக்களம் முற்றுகை..!

0

யாழ் சரசாலை காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த காசிப்பு உற்பத்தி நிலையம் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு மற்றும் கோடா என்பன மீட்க்கப்பட்டுள்ளன.இன்று வெள்ளிக் கிழமை சாவகச்சேரி மதுவரி நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்படி கசிப்பு குகையை முற்றுகையிட்டனர்.இதன் போது 35 லீற்றர் கசிப்பும், 150 லீட்டர் கோடாவும் மீட்க்கப்பட்டுள்ளது. உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.