லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

0

நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிவாயு நிரப்பப்படாது சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோரை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த நிறையுடைய எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த விற்பனை நிலையமொன்றுக்கும் அந்த விற்பனை நிலையத்திற்கு சிலிண்டர்களை விநியோகித்த வத்தளை பகுதியிலுள்ள நிறுவனமொன்றுக்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வழக்கின் பிரதிவாதிகளுக்கு நேற்று அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.