7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது..!

0

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினமான நேற்று மாலை வீட்டிலிருந்து தாயார் வெளியில் சென்றிருந்த வேளையில், குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இருசிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலத்தகாரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.


இதனையடுத்து குறித்த சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்துள்ளார்.

பின்னர், பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.