ஜூலை 2 வரை நாட்டில் பயணத் தடை? தீவிர பரிசீலனையில் அரசாங்கம்..!

0

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரையில் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பு உள்ளிட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இதேவேளை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, ஜுன் மாதம் 14ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு அமுல்படுத்துமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.