எரிபொருள் விலையேற்றம்; அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

0

எரிபொருளுக்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


நாட்டிற்குள் கொரோனா பரவல் காணப்படுகின்றமையினால், எரிப்பொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு திகதி அறிவிக்கப்படும் பட்சத்தில், எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் ஒன்று திரளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகவே அதிக விலையில் எரிப்பொருளை கொள்வனவு செய்து, குறைந்த விலையில் அதனை மக்களுக்கு வழங்கி வந்ததாகவும் வர் கூறியுள்ளார். இதனால், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 2020ஆம் ஆண்டு 33,100 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.


அதனால், குறித்த நிறுவனம் கடனை மீள செலுத்திக் கொள்ள முடியாது, மிகுந்த சிரம நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதனால், எரிப்பொருள் விலையில் திருத்தத்தை ஏற்படுத்த வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.