கொவிட் தொற்றினால் முதியோர் மரணமடையும் வீதம் அதிகரிப்பு; 47 பேர் நேற்றும் உயிரிழப்பு..!

0

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் மரணமடையும் வீதம் அதிகரித்துச் செல்வதுடன் இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


எனவே அவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை அரசு வழங்க முன்வர வேண்டும்.