வவுனியாவில் கற்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் விளையாடும் குடும்ப நல உத்தியோகத்தர்கள்..!

0

வவுனியாவின் சில பகுதிகளில் கற்பினித் தாய்மார்களுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரைகள் காலவாதியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் குறித்த விடயம் பதிவிடப் பட்டிருந்த நிலையில் தனது மனைவிக்கு வழங்கியிருந்த மாத்திரைகளை எடுத்து பார்த்த போது அவையும் காலவாதியாகி உள்மையை அறிய முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.


ஒரு பக்கம் கொரோனா அச்சம் காரணமாக முறையாக மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் கற்பிணித் தாய்மாருக்கு இவ்வாறான காலாவதியான மாத்திரைகளையும் வழங்கி பிறக்கப் போகும் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இறம்பைக்குளம் போன்ற பகுதிகளில் தமிழ் பேசத் தெரியாத பெரும்பான்மையின உத்தியோகத்தர்களை நியமித்துள்ள நிலையில் இது வரை குழந்தைகளுக்கான திரிபோசாவை சரியாக வழங்காத இவர்கள் தற்போது மாத்திரைகளிலும் தமது அசமந்தப் போக்கை காட்டியுள்ளனர்.


இது உத்தியோகத்தர்களின் தவறா ? அல்லது மேலதிகாரிகளின் தவறா? அல்லது அனைவரும் இணைந்த கூட்டு செயற்பாடா?
இந்த விடயம் மனிதவுரிமை ஆணைக்குழு தொடக்கம் ஜனாதிபதி வரை அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு செல்ப்படும்.

தயவு செய்து கற்பினித் தாய்மார்களாகிய உங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ஒரு தடவைக்கு இரு தடவை நன்றாக பரிசோதித்து உட்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.