உடுவில் புளியடி ஞானவைரவர் கோவில் காணியை அடாத்தாக பிடித்த மண் மாபியாக்கள்..!

0

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் J/183 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது உடுவில் புளியடி ஞான வைரவர் கோவில் இக்கோவிலுக்கு தெற்காக கோவிலின் வெற்றுக்காணி காணப்படுகின்றது.

இக்காணியை பலரும் உரிமைகோரி பொழுதும் இக்காணிக்குரிய எந்தவிதமான ஆவணக்களும் காணப்படவில்லை.


தற்பொழுது பயணத்தடை இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுதல் சட்டம் மற்றும் மற்றும் பயணத் தடை தொடர்பான சட்டங்களும் 1987 ம் ஆண்டின் 15 ம் இலக்க பிரதேச சபை சட்டத்திற்கு முரணாக வேலிகள் அமைத்து குறித்த காணியானது குறித்த மண் மாபியாக்கள் அடத்தாக பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 31.05.2021 ம் திகதி குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த அடாத்துகாரரை அழைத்து வினாவிய பொழுது தாங்கள் போதைபொருள் பாவிப்பவர்கள் உட்புகாது வேலி அமைத்தாக கூறினார். இதன் பொழுது குறித்த வேலியை அகற்றுமாறும் கோவில் நிர்வாகம் தேவையான இடத்தில் வேலிகளை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.


குறித்த காணி அடாத்துகாரருக்கு கந்தையா மயில்வாகனம் என்பர் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் வைப்பதற்கு எனது காணியின் ஒரு துண்டை வழங்கியிருந்ததோடு இவ்வறையின் பயன்பாடு இல்லை என்றால் குறித்த அறையை தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவுறித்தியிருந்தார்.
இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன் அடாத்துகாரர் குறித்த அறை அமைந்தது பகுதியை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர். பின்னர் அம்முயற்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது