மக்களுடன் மோசமாக நடந்து கொள்ளும் பொலிஸார் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை..!

0

பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் வீதிகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை பரிசோதிக்கும் போது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு சுற்றறிக்கை மூலம் பொலிஸ்மா அதிபர் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சுற்றறிக்கையின் படி, வீதித் தடைகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் மோசமாக நடந்து கொண்ட விதத்தை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டன.

வாகனங்கள் மற்றும் நபர்களை ஆய்வு செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தையும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.


இது போன்ற செயல்கள் பொலிஸ் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும், பொலிஸ் சேவையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரிகளின் இத்தகைய நடத்தை ஊடகங்களில் வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்டஅதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.