இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவதில் சிக்கல்; டெலிகிறாம் பாவனை அதிகரிப்பு..!

0

இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்காதவர்கள் நேற்று முதல் பல்வேறு தடைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பாக வாட்ஸப் மூலமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸப் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்காதவர்கள் அடுத்த வாரம் முதல் நிரந்தமாக அதனை பயன்படுத்த முடியாத நிலைமைஏற்ப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இலங்கையில் தற்போது பலரும் டெலிகிறாம் பாவனைக்கு மாறிவருகின்றனர். வாட்ஸப்புடன் ஒப்பிடும் போது இலகுவாக, பல்வேறு சிறப்பம்சங்களுடன் மட்டுமன்றி சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் டெலிகிறாம் தமது சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

join our telegram Society CLICK HERE